CSI இரண்டாம் ஆராதனை முறை

துதி

எல்லாரும் எழுந்து நிற்க, ஆராதனை நடத்துகிறவர்.

நாம் கடவுளைத் தொழுவோம்

திருமறையிலிருந்து பின்வருவன போன்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட திருவசனங்களை ஆராதனை நடத்துகிறவர் வாசிப்பார்.

தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்
யோவான் 4.24
நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. ரோமர் 1.3
இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம். சங்கீதம் 118.24
மாலை
சூரியன் உதிக்கும் திசைதொடங்கி, அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக. சங்கீதம் 113.3
தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை. அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். 1 யோவான் 1. 5,7

அட்வந்து
கர்த்தர் சமீபமாயிருக்கிறார். நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். பிலிப்பியர். 4. 5,6
எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். லூக்கா 12.37

கிறிஸ்துவின் பிறப்பு
இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். லூக்கா 2. 10,11

பிரசன்னத் திருநாள்
சூரியன் உதிக்கிற திசைதொடங்கி, அது அஸ்தமிக்கிற திசைவரைக்கும், என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்; எல்லா இடங்களிலும் என் நாமத்துக்குத் தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும்; என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும் மல்கியா 1. 11

லெந்து நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார். யோவேல் 2, 13

இயேசு சொன்னார் ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். மாற்கு 8.34

பாடுபட்ட வரம்
நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். 1 பேதுரு 2.24

குருத்தோலை ஞாயிறு
இதோ உன் இரட்சிப்பு வருகிறது, இதோ, அவர் அருளும் பலன் அவரோடும், அவர் செய்யும் பிரதிபலன் அவர் முன்பாகவும் செல்லுகின்றன என்று சீயோன் குமாரத்தியிடம் சொல்லுங்கள் என்றகிறார் கர்த்தர். ஏசாயா 62.11

பெரிய வெள்ளிக்கிழமை
மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என்றார். மாற்கு 10.45

உயிர்த்தெழுந்த திருநாள்
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார். 1 பேதுரு 1,. 3,4
முதலும் இறுதியுமானவர் நானே, ஜீவனுள்ளவரும் மரித்துப் போனவரும் நானே. இதோ என்றென்றும் ஜீவனுள்ளவராயிருக்கிறேன். நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். வெளி 1. 17,18

விண்ணுக்கெழுதல்
வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம். ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். எபிரேயர் 4. 14,16

பெந்தகோஸ்தே எனும் தூய ஆவியின் திருநாள்
நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறது ரோமர் 5.5

திரித்துவ திருநாள்
ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்! சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென். ரோமர் 11. 33,36

சகல புனிதர்களின் திருநாள்
திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார். நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். வெளிப்படுத்துதல் 19. 6,7

புனிதர் திருநாள் பொதுவானது
ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். எபிரேயர் 12. 1,2

தென் இந்திய திருச்சபை நிறுவன நாள்
இயேசு சொன்னார்
நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருப்பதினாலும், நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். யோவான் 17. 23,22

புத்தாண்டுப் பிறப்பு நாள் அல்லது ஏதாவது ஆண்டு விழா
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். ஏசாயா 40. 31

அறுவடைப் பண்டிகை
பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது. சங்கீதம் 24.1

தேசிய விழா
தேவரீர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள ஜாதிகளை நடத்துவீர்; ஆதலால் ஜாதிகள் சந்தோஷித்து, கெம்பீரத்தோடே மகிழக்கடவர்கள் சங்கீதம் 67.4

பின்பு அவர் சொல்வது ஆண்டவரே, எங்கள் உதடுகளை திறந்தருளும்
அப்பொழுது எங்கள் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்
பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமையுண்டாவதாக
ஆதியிலும் இப்பொழுதும் எப்பொழுதுமான சதாகாலங்களிலும் மகிமையுண்டாவதாக – ஆமென்

பின் வருவனவற்றுள் ஒன்றைப் பாடலாம் அல்லது சொல்லலாம் அல்லது கடவுள் வாழ்த்து பாடலாம்.

திரியேக கடவுளைப் போற்றுதல்
ஆராதனை நடத்துபவர்

சேனைகளின் தேவனாகிய கர்த்தரே நீர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், வானமும் பூமியும் உமது மகிமையால் நிறைந்திருக்கின்றன. உன்னதத்திலே ஓசன்னா. சபை

கர்த்தரின் நாமத்தினாலே வந்தவரும் வருகின்றவருமானவர் தோத்தரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஒசன்னா.

ஆராதனை நடத்துபவர் கடவுளே நீர் பரிசுத்தர்
இடது பக்கத்திலிருப்பவர்கள் கடவுளே நீர் பரிசுத்தர்
வலது பக்கத்திலிருப்பவர்கள் கடவுளே நீர் பரிசுத்தர்

ஆராதனை நடத்துபவர் சர்வ வல்லவரே நீர் பரிசுத்தர்
இடது பக்கத்திலிருப்பவர்கள் சர்வ வல்லவரே நீர் பரிசுத்தர்
வலது பக்கத்திலிருப்பவர்கள் சர்வ வல்லவரே நீர் பரிசுத்தர்

ஆராதனை நடத்துபவர் சாவாமையுடயவரே நீர் பரிசுத்தர்
இடது பக்கத்திலிருப்பவர்கள் சாவாமையுடயவரே நீர் பரிசுத்தர்
வலது பக்கத்திலிருப்பவர்கள் சாவாமையுடயவரே நீர் பரிசுத்தர்

ஆராதனை நடத்துபவர் ஆண்டவரே, எங்களுக்காகச் சிலுவையில் அறையுண்ட எங்கள் மீட்பரே, எங்கள் மேல் கிருபையாயிரும்

இடது பக்கத்திலிருப்பவர்கள் ஆண்டவரே, எங்களுக்காகச் சிலுவையில் அறையுண்ட எங்கள் மீட்பரே, எங்கள் மேல் கிருபையாயிரும்

வலது பக்கத்திலிருப்பவர்கள் ஆண்டவரே, எங்களுக்காகச் சிலுவையில் அறையுண்ட எங்கள் மீட்பரே, எங்கள் மேல் கிருபையாயிரும்

ஆராதனை நடத்துபவர் ஆண் எங்கள் ஜெபங்களையும் ஆராதனையையும் ஏற்றுக் கொண்டு எங்கள் மேல் கிருபையாயிரும்

எல்லோரும் ஆண்டவரே, எங்கள் ஜெபங்களையும் ஆராதனையையும் ஏற்றுக் கொண்டு எங்கள் மேல் கிருபையாயிரும்

2 ஆராதனை நடத்துகிறவர் சொல்லலாம்

எங்கள் தந்தையாம் கடவுளே, உமது வல்லமையாலும் ஞானத்தாலும் எல்லாவற்றையும் படைத்து, உமது குமாரனை எங்கள் இரட்சகராகத் தரும்படி உலகத்தில் அன்பு கூர்ந்தீரே, உம்மைப் போற்றுகிறோம். குமாரனாம் கடவுளே, பாவத்தைத் தவிர்த்து எல்லாவற்றிலும் எங்களைப் போல் மனிதனாகி, எங்கள் பாவங்கங்களுக்காக ஒப்புக் கொடுக்கப்பட்டு, எங்கள் நீதிக்காக உயிர்த்தெழும்பியரே, உம்மைப் போற்றுகிறோம்.பரிசுத்த ஆவியானவராகிய கடவுளே, எல்லா உண்மைக்குள்ளும் எங்களை வழி நடத்தி, கடவுளின் எங்கள் நெஞ்சில் பொழிகிறவரே, உம்மைப் போற்றுகிறோம். பிதா குமாரன் பரிசுத்த ஆவியாகிய கடவுளே உமக்கே எக்காலமும் எல்லாப் புகழும் உண்டாவதாக. ஆமென்.

பாவ அறிக்கை
ஆராதனை நடத்துகிறவர் கீழ்க்கண்ட திருவசனங்கள் போன்றவற்றைத் திருமறையிலிருந்து வாசிக்கலாம்.
நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். 1 யோவான் 1. 8,9

நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் லூக்கா 15. 18,19

தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் மாற்கு 1.15

நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். எபிரேயர் 4.15

ஆராதனை நடத்துகிறவர்

சர்வ வல்லமையுள்ள கடவுளிடத்தில் நாம் நமது பாவங்களைத் தாழ்மையோடு அறிக்கையிடுவோம்

பின்வரும் பாவ அறிக்கை ஜெபங்களில் ஒன்றை யாவரும் சொல்லுவார்

1 சர்வ வல்லமையும் மிகுந்த இரக்கமுள்ள பிதாவே, தப்பிப் போன ஆடுகளைப் போல உம்முடைய வழிகளை விட்டு வழுவி அலைந்து போனோம். எங்கள் இருதயத்தின் விருப்பங்களுக்கும் யோசனைகளுக்கும் விருப்பங்களுக்கும் மிகவும் இணங்கி நடந்தோம். உமது பரிசுத்த கற்பனைகளுக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தோம்ய செய்யத்தக்கவைகளைச் செய்யாமல் செய்யத்தகாதவைகளைச் செய்து வந்தோம். எங்களுக்குச் சுகமேயில்லைய ஆனாலும் ஆண்டவரே எங்களுக்குச் சுகமேயில்லை. ஆனாலும் ஆண்டவரே தேவரீர் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் மனிதருக்கு அருளிச் செய்த வாக்குத்தங்களின் படியே நிர்பாக்கியமுள்ள குற்றவாளியாகிய எங்களுக்கு இரங்கும். தப்பிதங்களை அறிக்கையிடுகிற எங்கள் மேல் பொறுமையாயிரும்ய பாவத்தினிமித்தம் துக்கப்படுகின்ற எங்களைச் சீர்படுத்தும். மிகவும் இரக்கமுள்ள பிதாவே, உம்முடைய பரிசுத்த நாமத்துக்கு மகிமையுண்டாகும்படி, நாங்கள் இனித் தேவ பக்தியும், நீதியும்ய தெளிந்த புத்தியும் உள்ளவர்களாக நடந்து வர இயேசு கிறிஸ்துவினிமித்தம் எங்களுக்குகிருபை செய்தருளும். ஆமென்.

2 எங்கள் தந்தையாம் கடவுளே, நினைவினாலும் வார்த்தைகளினாலும் செய்கையினாலும் உமக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்திருக்கிறோம். முழு மனதோடு நாங்கள் உம்மை நேசிக்கவில்லை. எங்களிடத்தில் நாங்கள் அன்பு கூறுவதுபோல அயலாரிடத்தில் நாங்கள் அன்பு கூறவில்லை. எங்கள்மேல் இரக்கமாயிருக்க உம்மை வேண்டிக்கொள்கிறோம். எங்கள் பாவ அழுக்கை நீக்கி எங்களைச் சுத்திகரியும். எங்கள் குற்றங்களை விட்டுவிட எங்களுக்கு உதவி புரியும். எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்

குரு நமக்கு என்பதற்குப் பதிலாக உங்களுக்கு என்று கூறலாம்.

திரு வசனப் போதனை

எல்லாரும் எழுந்து நிற்க

ஆ.ந ஆண்டவரைத் துதியுங்கள்

சபை ஆண்டவர் நாமம் துதிக்கப்படுவதாக

பின்வருவனவற்றுள் ஒன்றைச் சொல்லலாம் அல்லது பாடலாம் சங்கீதம் 95

சங்கீதம் 100

அந்தந்த நாளுக்குரிய சங்கீதம் அல்லது சங்கீதங்கள் சொல்ல அல்லது பாட வேண்டும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு நாட்களிலும் வாசிக்க வேண்டிய சங்கீதங்களைப் பார்க்கலாம். சங்கீதங்களோ, பாடல்களோ பாட அல்லது சொல்லப்படும் போது ஆராதனை நடத்துகிறவரும் ஜனங்களும் நிற்கலாம் அல்லது உட்கார்ந்திருக்கலாம்.

முதலாம் பாடம்

முதலாம் பாடம் பழைய ஏற்பாட்டிலிருந்தாவது, அப்போகரிப்பா ஆகமத்திலிருந்து வாசிக்கப்படும்

பின்வருவனவற்றுள் ஒன்று பாடப்படும் அல்லது வாசிக்கப்படும்

சகரியாவின் கீதம்

வாலிபர் மூவரின் கீதம்

கன்னிமரியாளின் கீதம்

திருச்சபையின் கீதம்

சிமியோனின் கீதம்

அருளுரையும் விசுவாசப் பிரமாணமும்

இங்கே அருளுரை ஆற்றலாம்

எல்லோரும் எழுந்து, அப்போஸ்தலர் விசுவாசப் பிரமாணத்தைச் சொல்ல வேண்டும் அல்லது பாட வேண்டும்

வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறேன்: அவருடைய குமாரனாகிய நம்முடைய நாதர் இயேசுகிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன். அவர் பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் உற்பவித்துப் பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, பாதாளத்தில் இறங்கினார்: மூன்றாம் நாள் மரித்தோரிடத்திலிருந்து எழுந்தருளினார்: பரமண்டலத்துக்கேறி, பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்; அவ்விடத்திலிருந்து உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க வருவார். பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன், பொதுவாயிருக்கிற பரிசுத்த சபையும்; பரிசுத்தவான்களுடைய ஐக்கியமும்; பாவ மன்னிப்பும்; சரீரம் உயிர்த்தெழுதலும்; நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறேன். ஆமென்

ஜெபங்கள்

கர்த்தர் உங்களோடிருப்பாராக

அவர் உமது ஆவியோடும் இருப்பாராக ஜெபம் செய்வோம்

கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும்

கிறிஸ்துவே, எங்களுக்கு இரங்கும்

கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும்

பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல, பூமிலேயும் செய்யப்படுவதாக. அன்றன்றுள்ள எங்கள் அப்பத்தை எங்களுக்கு இன்று தாரும். எங்களுக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்கிறவர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல, எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும். எங்களை சோதனைக்குள் பிரவேசிக்கப் பண்ணாமல் தீமையினின்று இரட்சித்துக் கொள்ளும். இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.

ஆராதனை நடத்துகிறவரும் ஜனங்களும் பின்வரும் வாக்கியங்களையும் மறுமொழிகளையும் சொல்லலாம் அல்லது பாடலாம்.

ஆ.ந ஆண்டவரே உமது இரக்கத்தை எங்களுக்கு காண்பியும்

சபை உம்முடைய இரட்சிப்பை எங்களுக்கு அருளிச் செய்யும்

ஆ.ந ஆண்டவரே எங்களை ஆளுபவர்களை வழிநடத்தும்

சபை அவர்களுக்குப் பரத்திலிருந்து வரும் ஞானத்தைக் கொடுத்தருளும்

ஆ.ந உம்முடைய பணிவிடைக்காரருக்கு நீதியைத் தரிப்பியும்

சபை நீர் தெரிந்து கொண்ட ஜனத்தை சந்தோசப்படுத்தும்

ஆ.ந நீர் தெரிந்து கொண்ட ஜனத்தை இரட்சியும்

சபை உம்முடைய சுதந்திரத்தை ஆசிர்வதியும்

ஆ.ந ஆண்டவரே எங்கள் காலத்தில் சமாதானத்தை தந்தருளும்

சபை தேவரீரேயெல்லாமல் உமகத்தை ஆளுபவர் ஒருவருமில்லை

ஆ.ந கடவுளே எங்கள் இருதயங்களைச் சுத்திகரியும்

சபை உம்முடைய பரிசுத்த ஆவியை எங்களிடத்திலிருந்து எடுத்துக் கொள்ளாதேயும்

ஆராதனை நடத்துகிறவர் அந்தந்த நாளுக்குரிய சுருக்க ஜெபத்தை அல்லது சுருக்க ஜெபங்களை ஏறெடுத்தபின், பின்வருவனற்றில் ஒன்றைச் சொல்லுவார்.

சமாதானத்துக்காக ஜெபம்

1 சமாதானத்துக்குக் காரணரும் ஏக சிந்தையை விரும்புகிறவருமாகிய கடவுளே, உம்மை அறிவதே நித்திய ஜீவன், உம்மைச் சேவிப்பதே மெய்ச் சுயாதீனம், தேவரீரைத் தஞ்சமாகக் கொண்டிருக்கிற உமது அடியாராகிய நாங்கள், எந்த விரோதிகளுடைய வல்லமைகளுக்குப் பயப்படாதிருக்கும்படியாக எங்கள் சத்துருக்கள் செய்யும் எல்லா பிரயத்தனங்களின்று, எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வல்லமையினால் எங்களைக் காப்பாற்றியருளும். ஆமென்.

2 சகல பரிசுத்த விருப்பங்களுக்கும் சகல நல்லோசனைகளுக்கும், சகல நீதியான கிரியைகளுக்கும் காரணமாகிய கடவுளே, உலகம் தரக்கூடாத சமாதானத்தை உமது அடியாராகிய எங்களுக்குத் தந்தருளும். நாங்கள் உமது கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க மன உற்சாகமுள்ளவர்களாயிருந்து, சத்துருக்கள் பயமில்லாமல் உம்மாலே காக்கப்பட்டு, ஆறுதலோடும் அமைதலோடும் எங்கள் ஜீவ காலத்தைப் போக்குவதற்கு எங்கள் இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் புண்ணியங்களினிமித்தம் கிருபை செய்தபருளும்.

காலை ஆராதனையில் பின்வருவற்றில் ஒரு ஜெபத்தை ஏறெடுக்கவும். தேவ கிருபைக்காக ஜெபம்

1 சர்வ வல்லமையுடைய நித்திய கடவுளே, இந்நாள் வரையும் எங்களைச் சுகமாய் நடத்தி வந்த எங்கள் பரம பிதாவாகிய ஆண்டவரே. இந்நாளிலும் உமது மிகுந்த வல்லமையால் எங்களைக் காப்பாற்றி, நாங்கள் யாதொரு பாவத்துக்கு உட்பட்டாலும், எந்தவிதமான மோசத்துக்கும் அகப்படாமலும் உமது பார்வைக்கு நீதியாயிருக்கிறதை எப்பொழுதும் செய்கிறதற்கு நாங்கள் செய்கிற எல்லாவற்றையும் உம்முடைய ஆளுகையினாலே நடத்தியருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக் கொள்கிறோம். ஆமென்.

2 எல்லாம் வல்ல ஆண்டவரே, நித்திய பிதாவே, உமது பிரமாணங்களின் வழிகளிலும், உமது கற்பனைகளுக்கிசைந்த செயல்களிலும் ஈடுபட எங்கள் உடலையும் வாழ்க்கையையும் வழிநடத்தி, தூய்மைப்படுத்தி, ஆளுகை செய்யும். இவ்வாறாக இங்கும், எப்பொழுதும், எங்கள் உடலும் உள்ளமும் உமது வல்லமையால் பாதுகாக்கப்படச் செய்யும். எங்கள் ஆண்டவரும் இரட்சகருமான இயேசுகிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக் கொள்கிறோம். 3 எல்லா அதிகாரமும் வல்லமையுமுடைய ஆண்டவரே, நீர் தாமே எல்லா நன்மைகளுக்கும் காரணர், உமது திருநாமத்தை நேசிக்கும் அன்பை எங்கள் நெஞ்சத்தில் பொருத்தி, மெய்த் தேவபக்தியை எங்களுக்குள்ளே வளரப் பண்ணி, சகல நன்மையிலும் எங்களை ஆதரித்து, உமது மிகுந்த இரக்கத்தினாலே இவைகளில் எங்களை நிலை நிறுத்த வேண்டுமென்று எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக் கொள்கிறோம். ஆமென்

மாலை ஆராதனையில் பின்வருவனற்றில் ஒரு ஜெபத்தை ஏறெடுக்கவும்.

எல்லா மோசங்களுக்கும் விலக்கிக் காப்பதற்காக ஜெபம். 1 ஆண்டவரே, எங்கள் அந்தகாரம் நீங்க வெளிச்சம் தந்து, இந்த இராவில் நேரிடும் சகல மோசங்களுக்கும் விக்கினங்களுக்கும் உமது மிகுந்த இரக்கத்தினால் எங்களைக் காக்க வேண்டுமென்று, உம்முடைய ஒரே குமாரனும் எங்கள் இயேசு கிறிஸ்துவின் அன்பினிமித்தம் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 2 இரக்கமுள்ள ஆண்டவரே பிரசன்னமாயிரும் இராப்பொழுதில் எங்களைப் பாதுகாரும், விரைந்தோடும் உலகின் மாறுதலாலும், எதிர்பாரா நிகழ்ச்சிகளாலும் பாதிக்கப்படும் எங்களை உமது நித்திய மாறாத நிலையில் தங்கச் செய்தருளுமாறு எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக் கொள்கிறோம். ஆமென்

ஒரு பாட்டுப் பாடலாம்

இவ்விடத்தில் குறிப்பிட்ட தேவைகளுக்கேற்ப ஜெபங்களையும், தோத்திர ஜெபங்களையும் ஏறெடுக்கவும், அவைகளைச் சொந்த சொற்களில் அமைத்தும் ஏறெடுக்கலாம். எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நாட்டுக்கும் அதன் அதிகாரிகளுக்குமான ஜெபம் ஒன்று இருத்தல் வேண்டும். உதாரணமாக, திருவிருந்து ஆராதனையிலுள்ள ஒரு லித்தானியாவைச் சொல்லலாம் அல்லது பாட்டாக ஏறெடுக்கலாம்.

தோத்திர ஜெபங்களில் பொதுவான தோத்திர ஜெபம் இடம் பெறலாம்

சர்வ வல்லமையுள்ள கடவுளே, சர்வ ஜீவ தயாபர பிதாவே, அபாத்திரரான உமது அடியாராகிய எங்களுக்கும் மற்றெல்லா மனிதருக்கும், தேவரீர் அருளிச் செய்த பற்பல கிருபைக்காகவும், அன்புள்ள தயவுக்காகவும், நாங்கள் மிகுந்த தாழ்மையோடும் முழு இருதயத்தோடும் உமக்கு தோத்திரம் செலுத்துகிறோம். எங்களைச் சிருஷ்டித்ததற்காகவும் காப்பாற்றுகிறதற்காகவும் இம்மைக்குரிய எல்லா ஆசிர்வாதங்களுக்காகவும் உம்மைத் துதிக்கிறோம், விசேஷமாய் எங்கள் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவினாலே உலகத்தை மீட்டுக்கொண்ட விலைமதியாத உமது அன்புக்காகவும், கிருபையின் யத்தனங்களுக்காகவும், மகிமையடைவோம் என்கிற நம்பிக்கைக்காகவும், உமக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறோம். நாங்கள் உண்மையாய் நன்றியறிந்த இருதயமுள்ளவர்களாயிருக்கவும், எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கு முன்பாகப் பரிசுத்தமும் நீதியுள்ளவர்களாய் நடக்கவும், எங்கள் வாக்கினாலே மாத்திரமல்ல எங்கள் நடக்கையினாலேயும் உம்முடைய புகழைப் பிரஸ்தாபப்படுத்தவும் தேவரீர் செய்த உபகாரங்கள் எல்லாவற்றையும் உணர்ந்து கொள்ளும் உணர்வை எங்களுக்கு அருளிச் செய்ய வேண்டுமென்று எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்கிறோம். அவருக்கும் தேவரீருக்கும் பரிசுத்த ஆவிக்கும் எல்லா மேன்மையும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக.

பின்வருவனவற்றில் ஒன்றை முடிவாக ஏறெடுக்கலாம்.

இத்தருனத்தில் ஒருமனப்பட்டு உம்மை நோக்கி எங்கள் பொதுவான விண்ணப்பங்களைச் செய்ய எங்களுக்குக் கிருபை அளித்த சர்வ வல்லமையுள்ள கடவுளே, இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே கூடி வரும்பொழுது, அவர்கள் கேட்கிறவைகளை அருளிச் செய்வேனென்று வாக்கருளியிருக்கிறீரே, கர்த்தாவே உமது அடியாராகிய எங்களுக்கு வேண்டிய நன்மைகள் உண்டாக, எங்கள் விருப்பங்களையும் வேண்டுதல்களையும் இப்பொழுது நிறைவேற்றி, இம்மையிலே உம்முடைய சத்தியத்தை அறிகிற அறிவையும் மறுமையிலே நித்திய ஜீவனையும் எங்களுக்குக் கட்டளையிட்டருளும். ஆமென்.

அறிவிப்புகளை இங்கு கூறலாம், ஒரு பாட்டைப் பாடலாம்

காணிக்கைப் படைப்பு இருந்தால், இங்கே அவைகளைப் படைக்கலாம். அல்லது ஆராதனைக்கு முன்பே அவைகளைச் சேகரிக்கலாம். காணிக்கையைக் குரு வாங்கி, மக்களின் சார்பில் ஜெபஞ்செய்து அதைக் கடவுளுக்குப் படைக்க வேண்டும். இறுதியாகப் பின்வருவனவற்றில் ஒர் ஆசிர்வாதம் கூறிச் சபையை அனுப்பி வைக்க வேண்டும்.

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியின் ஐக்கியமும் உங்களனைவரோடும் இருப்பதாக. ஆமென்

தேவனுடைய இரக்கமுள்ள கிருபைக்கும் பராமரிப்புக்கும் உங்களை ஒப்படைக்கிறோம். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியுமாகிய சர்வ வல்லமை பொருந்திய கடவுளுடைய ஆசிர்வாதம் உங்களுக்குள்ளே இருந்து, எப்பொழுதும் உங்களோடே நிலைத்திருக்கக் கடவது. ஆமென்.

ஆண்டவர் உங்களை ஆசிர்வதித்து உங்களைக் காக்கக் கடவர். ஆண்டவர் தம்முடைய முகத்தை உங்கள் மேல் பிரகாசிக்கப் பண்ணி உங்கள் மேல் கிருபையாயிருக்கக் கடவர்.

குரு உங்கள் மேல் என்பதற்கு பதிலாக நம்மேல் என்று கூறலாம்.

அல்லது பின்வருவனற்றில் ஒன்றை பயன்படுத்தலாம்.

நம்மையும் உலகமனைத்தையும் படைத்த பிதாவாகிய கடவுளுக்கும், நம்மையும் எல்லா மக்களையும் மீட்ட குமாரனாகிய கடவுளுக்கும், நம்மையும் தெரிந்தெடுக்கப்பட்ட எல்லாக் கடவுள் மக்களையும் பரிசுத்தப்படுத்தும் பரிசுத்த ஆவியாகிய கடவுளுக்கும் எப்பொழுதும் மகிமை உண்டாவதாக. ஆமென்

நமக்குள் கிரியை செய்கிற தம்முடைய வல்லமையின் படியே, நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவருக்கு திருச்சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

Choose Your Color
Purchase now $17
You will find much more options for colors and styling in admin panel. This color picker is used only for demonstation purposes.