1 அகோர கஸ்தி பட்டோராய் வதைந்து வாடி நொந்து, குரூர ஆணி தைத்தோராய் தலையைச் சாய்த்துக்கொண்டு, மரிக்கிறார் மா நிந்தையாய்! துன்மார்க்கர் சாகும் வண்ணமாய் மரித்த இவர் யாவர்? 2 சமஸ்தமும் மா வடிவாய் சிஷ்டித்து ஆண்டுவந்த, எக்காலமும் விடாமையாய் விண்ணோரால் துதி பெற்ற மா தெய்வ மைந்தன் இவரோ? இவ்வண்ணம் துன்பப்பட்டாரோ பிதாவின் திவ்விய மைந்தன்? 3 அநாதி ஜோதி நரனாய் பூலோகத்தில் ஜென்மித்து, அரூபி ரூபி தயவாய் என் கோலத்தை எடுத்து, மெய்யான பலியாய் மாண்டார் நிறைந்த மீட்புண்டாக்கினார் என் ரட்சகர், என் நாதர்.