1 மாட்சி போரை போரின் ஓய்வை பாடு என்தன் உள்ளமே; மாட்சி வெற்றி சின்னம் போற்றி பாடு வெற்றி கீதமே; மாந்தர் மீட்பர் கிறிஸ்து நாதர் மாண்டு பெற்றார் வெற்றியே. 2 காலம் நிறைவேற, வந்தார் தந்தை வார்த்தை மைந்தனாய்; ஞாலம் வந்தார், வானம் நீத்தே கன்னித் தாயார் மைந்தனாய்; வாழ்ந்தார் தெய்வ மாந்தனாக இருள் நீக்கும் ஜோதியாய். 3 மூன்று பத்து ஆண்டின் ஈற்றில் விட்டார் வீடு சேவைக்காய்! தந்தை சித்தம் நிறைவேற்றி வாழ்ந்தார்; தந்தை சித்தமாய் சிலுவையில் தம்மை ஈந்தார் தூய ஏக பலியாய். 4 வெற்றி சின்ன சிலுவையே, இலை மலர் கனியில் ஒப்புயர்வு அற்றாய் நீயே! மேலாம் தரு பாரினில்! மீட்பின் சின்னம் ஆனாய்; மீட்பர் தொங்கி மாண்டனர் உன்னில். 5 பிதா சுதன் ஆவியான தூயராம் திரியேகரே, இன்றும் என்றும் சதா காலம் மாட்சி ஸ்தோத்ரம் ஏற்பீரே; மாட்சி ஸ்தோத்ரம் நித்திய காலம் உன்னதத்தில் உமக்கே.