Tuesday, 9 April 2013 பாடல் : 86 1 விடியற்காலத்து வெள்ளியே, தோன்றி கார் இருள் நீங்கத் துணைபுரி வாய்; உதய நசஷத்திரமே, ஒளி காட்டி பாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய். 2 தண் பனித் துளிகள் இலங்கும் போது, முன்னணையில் அவர் தூங்குகின்றார்; வேந்தர், சிருஷ்டிகர், நல் மீட்பர் என்று தூதர்கள் வணங்கிப் பாடுகின்றார். 3 ஏதோமின் சுகந்தம், கடலின் முத்து, மலையின் மாணிக்கம் உச்சிதமோ? நற்சோலையின் வெள்ளைப் போளம் எடுத்து தங்கமுடன் படைத்தல் தகுமோ? 4 எத்தனை காணிக்கைதான் அளித்தாலும், மீட்பர் கடாசஷம் பெறல் அரிதே; நெஞ்சின் துதியே நல் காணிக்கையாகும்; ஏழையின் ஜெபம் அவர்க் கருமை. 5 விடியற்காலத்து வெள்ளியே, தோன்றி கார் இருள் நீங்கத் துணைபுரிவாய்; உதய நசஷத்திரமே, ஒளி காட்டி பாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய்.