1. பூமிமீது ஊர்கள் தம்மில் பெத்லெகேமே, சீர் பெற்றாய், உன்னில் நின்று விண்ணின் நாதர் ஆள வந்தார் ராஜனாய். 2. கர்த்தன் மனுடாவதாரம் ஆன செய்தி பூமிக்கு தெரிவித்த விண் நட்சத்திரம் வெய்யோனிலும் அழகு. 3. சாஸ்திரிமார் புல் முன்னணையில் காணிக்கை படைக்கிறார்; வெள்ளைப்போளம், தூபவர்க்கம், பொன்னும் சமர்ப்பிக்கப் பார்; 4. தூபவர்க்கம் தெய்வம் காட்டும், பொன் நம் ராஜன் பகரும்; வெள்ளைப்போளம் அவர் சாவை தெரிவிக்கும் ரகசியம். 5. புறஜாதியாரும் உம்மை பணிந்தார்; அவ்வண்ணமே இன்று உம் பிரசன்னம் நாங்கள் ஆசரிப்போம், இயேசுவே.