1 உம் அவதாரம் பாரினில் கண்ணுற்ற பக்தனாம் யோவான்; கர்த்தா, உம் சாந்த மார்பினில் அன்பாகச் சாயவும் பெற்றான். 2 சாவுறும் தன்மை தேவரீர் தரித்தும், திவ்விய வாசகன், அநாதி ஜோதி ரூபம் நீர், என்றே தெரிந்துகொண்டனன். 3 கழுகைப் போல் வான் பறந்தே மா ரகசியம் கண்ணோக்கினான்; நீர் திவ்விய வார்த்தையாம் என்றே மெய்யான சாட்சி கூறினான். 4 உம் அன்பு அவன் உள்ளத்தில் பெருகி பொங்கி வடிந்து, அவன் நல் ஆகமங்களில் இன்னும் பிரகாசிக்கின்றது. 5 சீர் கன்னி மைந்தா, இயேசுவே, பூலோக ஜோதியான நீர், பிதா, நல்லாவியோடுமே என்றென்றும் துதி பெறுவீர்.