1 மா மகிழ்வாம் இந்நாளில் செல்வோம் முன்னணைக்கே; மா மீட்பரை நாம் காண்போம் விஸ்வாசத்தோடின்றே. மா மீட்பரை நாம் காண்போம் விஸ்வாசத்தோடின்றே. 2 வந்தீர் மா அன்பாய்ப் பூவில் விண் லோகம் துறந்தீர்; மைந்தா, எப்பாவம் தீங்கில் விழாது ரட்சிப்பீர். மைந்தா, எப்பாவம் தீங்கில் விழாது ரட்சிப்பீர். 3 மெய் அன்பர் நண்பர் நீரே, நீரே எம் வாஞ்சையும்; மெய் அன்பை எங்கள் பாவம் வாட்டாது காத்திடும். மெய் அன்பை எங்கள் பாவம் வாட்டாது காத்திடும.;