1 மகிழ்ச்சி பண்டிகை கண்டோம், அகத்தில் பாலனைப் பெற்றோம்; விண் செய்தி மேய்ப்பர் கேட்டனர், விண் எட்டும் மகிழ் பெற்றனர். 2 மா தாழ்வாய் மீட்பர் கிடந்தார், ஆ! வான மாட்சி துறந்தார்; சிரசில் கிரீடம் காணோமே, அரசின் செல்வம் யாதுமே. 3 பார் மாந்தர் தங்கம் மாட்சியும் ஆ! மைந்தா இல்லை உம்மிலும்; விண்ணோரின் வாழ்த்துப்பெற்ற நீர் புல்லணை கந்தை போர்த்தினீர். 4 ஆ! இயேசு பாலன் கொட்டிலின் மா தேசு விண் மண் தேக்கவே, நள்ளிருள் நடுப் பகலாம், வள்ளல்முன் சூரியன் தோற்குமாம். 5 ஆ! ஆதி பக்தர் தேட்டமே! ஆ! ஜோதி வாழ்வின் விடிவே! ஆ! ஈசன் திரு வார்த்தை நீர்! தாவீதின் மைந்தன் கர்த்தன் நீர். 6 பண்டிகை இன்றே வருவீர், திண்ணமாய் நெஞ்சில் தங்குவீர்; ஓய்ந்த எம் கானம் மீண்டிடும், ஓய்வின்றி பூரித்தார்த்திடும்.