1.    உலகின் வாஞ்சையான
என் ஸ்வாமி இயேசுவே,
நான் உம்மை ஏற்றதான
வணக்கத்துடனே
சந்திக்கச் செய்வதென்ன?
நான் தேவரீருக்கு
செலுத்த உமக்கென்ன
பிரியமானது?

2.    நீர் சேர்கையில் களிக்கும்
சீயோன்; கிளைகளை
வழியிலே தெளிக்கும்;
நான் உமதுண்மையை
சங்கீதத்தால் துதிப்பேன்,
மகிழ்ச்சியுடனே
நான் உம்மைத் தோத்திரிப்பேன்,
மா வல்ல கர்த்தரே.

3.    நான் நன்மையான ஏதும்
இல்லாத தீயோனாய்
நிர்ப்பந்தம், பயம், நோவும்
நிறைந்தவனுமாய்
இருந்தபோதன்பாக
நீர் என்னை நோக்கினீர்;
உம்மை என் மீட்புக்காக
வெளிப்படுத்தினீர்.

4.    கட்டுண்டு நான் கிடந்தேன்,
என் கட்டை அவிழ்த்தீர்;
மா சாபத்தைச் சுமந்தேன்,
நீர் அதை நீக்கினீர்;
நீர் என்னை மேன்மையாக்கி
என் ஆத்துமத்திலே
இன்ப நிறைவுண்டாக்கி,
ரட்சிக்க வந்தீரே.

5.    வியாகுலம் அடைந்த
நரரின் கூட்டமே,
இக்கட்டினால் நிறைந்த
நிர்ப்பந்த மாந்தரே,
இதோ! சகாயர் வந்தார்;
கர்த்தர் கெட்டோருக்கு
இரட்சகரைத் தந்தார்,
அதால், மகிழ்ந்திரு.

6.    நெஞ்சே துன்மார்க்கருக்கும்
பகைஞர் உனக்கு
உண்டாக்கும் துன்பத்துக்கும்
பயப்படாதிரு;
உன் மீட்பர் ராஜாவாக
வருகிறாரல்லோ,
அவருக்கு முன்பாக
பேய்க் கூட்டம் நிற்குமோ?

7.    பொல்லாதவர்களுக்கு
அநந்த துக்கமும்,
நல்லோரின் கூட்டத்துக்கு
அநந்த பூரிப்பும்
முடிவிலே உண்டாக
அந்நாள் வருவாரே;
ஆம், எங்கள் மீட்புக்காக
நீர் வாரும், இயேசுவே