1. உன்னதமான கர்த்தரே இவ்வோய்வு நாளைத் தந்தீரே இதற்காய் உம்மைப் போற்றுவோம் சந்தோஷமாய் ஆராதிப்போம். 2. விஸ்தாரமான லோகத்தை படைத்த கர்த்தா, எங்களை இந்நாள்வரைக்கும் தேவரீர் அன்பாய் விசாரித்துவந்தீர் 3. எல்லாரும் உமதாளுகை பேரன்பு, ஞானம், வல்லமை மற்றெந்த மாட்சிமையையும் அறிந்து உணரச் செய்யும். 4. உயிர்த்தெழுந்த கிறிஸ்துவே நீர் எங்கள் ஆத்துமாவிலே தரித்து, எந்த நன்மைக்கும் நீர் எங்களை உயிர்ப்பியும். 5. தெய்வாவியே, நல் அறிவும் மெய் நம்பிக்கையும் நேசமும் சபையிலே மென்மேலுமே வளர்ந்துவரச் செய்யுமே.