1. நரர்க்காய் மாண்ட இயேசுவே மகத்துவ வேந்தாய் ஆளுவீர்; உம் அன்பின் எட்டா ஆழத்தை நாங்கள் ஆராயக் கற்பிப்பீர். 2. உம் நேச நாமம் நிமித்தம் எந்நோவு நேர்ந்தபோதிலும் சிலுவை சுமந்தே நித்தம் உம்மைப் பின்செல்ல அருளும். 3. பிரயாணமாம் இவ்வாயுளில் எப்பாதை நாங்கள் செல்லினும் போர், ஓய்வு, வெய்யில், நிழலில் நீர் வழித்துணையாயிரும். 4. வெம் பாவக் குணத்தை வென்றே, ஆசாபாசம் அடக்கலும், உம் அச்சடையாளம் என்றே நாங்கள் நினைக்கச் செய்திடும். 5. உம் குருசை இன்று தியானித்தே, எவ்வேலையும் தூயதென்றும் லௌகீக நஷ்டம் லாபமே என்றெண்ணவும் துணைசெய்யும். 6. உம் பாதம் சேரும் அளவும் எம் சிலுவையைச் சுமந்தே, உம் சிலுவையால் மன்னிப்பும் பொற்கிரீடமும் பெறுவோமே.