1. விண் வாசஸ்தலமாம் பேரின்ப வீடுண்டே; கிலேசம் பாடெல்லாம் இல்லாமல் போகுமே விஸ்வாசம் காட்சி ஆம் நம்பிக்கை சித்திக்கும் மா ஜோதியால் எல்லாம் என்றும் பிரகாசிக்கும். 2. தூதர் ஆராதிக்கும் மெய்ப் பாக்கியமாம் ஸ்தலம் அங்கே ஒலித்திடும் சந்தோஷக் கீர்த்தனம் தெய்வாசனம் முன்னே பல்லாயிரம் பக்தர் திரியேக நாதரை வணங்கிப் போற்றுவர் 3. தெய்வாட்டுக்குட்டியின் கை கால், விலாவிலே ஐங்காயம் நோக்கிடின் ஒப்பற்ற இன்பமே! சீர் வெற்றி ஈந்ததால் அன்போடு சேவிப்போம்! பேரருள் பெற்றதால் என்றைக்கும் போற்றுவோம் 4. துன்புற்ற பக்தரே விண் வீட்டை நாடுங்கள் தொய்யாமல் நித்தமே முன் சென்று ஏகுங்கள் இத்துன்பம் மாறுமே மேலோக நாதனார் நல் வார்த்தை சொல்லியே பேரின்பம் ஈகுவார்.