1. முடிந்ததே இந்நாளும் உம்மையே துதிப்போம் எத்தோஷம் இன்றி ராவும் சென்றிடக் கெஞ்சுவோம் நாதா உம்மோடு வைத்திடும் நீர் ராவில் எம்மைக் காத்திடும். 2. முடிந்ததே உற்சாகம்; உள்ளம் உயர்த்துவோம் எப்பாவம் இன்றி ராவும் சென்றிடக் கெஞ்சுவோம் ராவை ஒளியாய் மாற்றிடும் நீர் ராவில் உம்மைக் காத்திடும் 3. முடிந்ததே எம் வேலை களிப்பாய்ப் பாடுவோம் எச்சேதமின்றி ராவும் சென்றிடக் கெஞ்சுவோம் நாதா உம்மோடு வைத்திடும் நீர் ராவில் எம்மைக் காத்திடும். 4. காப்பீர் எம் ஆத்துமாவை எம் பாதை நேரிடும் எம்மோசம் சேதம் யாவும் உமக்குத் தோன்றிடும் மாந்தரின் நேசா, கேட்டிடும் எத்தீங்குமின்றிக் காத்திடும்.