1. தெய்வ கிருபையைத் தேட நீ போராடிக் கொண்டிரு, ஆவி பாரமின்றி ஏற நன்றாய் ஜாக்கிரதைப்படு. 2. வாசல் மிகவும் இடுக்கம் தாழ்மையாகி உட்படு; ஜீவனின் வழி நெருக்கம், லோக நேசத்தை விடு. 3. சேவகத்தில் பின் வங்காமல் ராஜ்ஜியத்துக் குட்படு; பேய் எதிர்த்தால், தளராமல் நின்று, ஏகிக்கொண்டிரு. 4. பக்தி முழு லோகத்துக்கும் உன்னை நீங்கலாக்கவே பார்த்துக்கொள், பங்கிட்டிருக்கும் நேசம்ஸ்வாமிக் கேற்காதே. 5. வேண்டுதலினால் போராடி, ஆண்டவரின் தயவு காணுமட்டுக்கும் மன்றாடி, கூப்பிட்டுக் கொண்டேயிரு. 6. கர்த்தர் உன்னைத் தயவோடே ஏற்றுக்கொண்ட பிறகு பாவம் உன்னிலே வேரோடே செத்ததென் ரெண்ணாதிரு. 7. ஜீவனுள்ள நாள் மட்டாக மோசங்கள் பல உண்டு; திகிலும் பயமுமாக உன்ரட்சிப்பைக் காத்திடு. 8. நீ முடுயைப் பெற்றிருந்தால், கெட்டியாய்ப் பிடித்திரு, பின்னடைந்து போய்விழுந்தால் மோசம் மா பெரியது. 9. மாய்கையை நோக்காதேவிட்டு ஞான ஆயுதங்களை ராவும் பகலும் பிடித்து, நிர்விசாரத்தைப் பகை. 10. உனதிச்சையை அடக்கு, அதுன் நெஞ்சை ஆளவே கிருபையான விளக்கு மங்கிப்போய் அவியுமே. 11. மாமிசத்துக் கேற்றதாக செய்தால், ஏழை ஆத்துமம் நோஞ்சலுஞ் சீர்கேடுமாகப் போகும் அது நிச்சயம். 12. உண்மையுள்ளோன் ஓய்வில்லாமல் பாவத்தை விரோதிப்பான், எத்தின் ஆவியைக் கேளாமல் வெற்றியாய்ப் போராடுவான். 13. அவன் கிறிஸ்துவைப் பின்பற்றி துன்பத்தைச் சகிக்கிறான், இளக்காரத்தை அகற்றிச் செல்வ வாழ்வாகாதென்பான். 14. லோகத்தாரது சிரிப்பு வெகு பைத்திய மென்பான், அதன் பிறகு துக்கிப்பு வருமே என்றறிவான். 15. உண்மையுள்ளோன் உலகத்தில் உள்ளதைச் சிநேகியான், அவன் பொக்கிஷம் பரத்தில் உண்டு, அங்கே ஏகிறான். 16. இதை நாம் நினைப்போமாக ஆ, நற்சேவகரைப் போல் பந்தயம் பெறுமட்டாக ஏகிப்போவோம், வாருங்கள். 17. முடிவிந்த ஜீவனுக்கு இன்று வரலாம் என்போம், நம்முடைய தீபத்துக்கு எண்ணெய் வார்க்கக்கடவோம் 18. லோகம் பேயின் வசமாமே, சோதோம் வேகும் அல்லவோ, தப்பிப்போக நேரமாமே, தீவிரிக்க வேண்டாமோ. 19. தப்பத்தக்கதாக ஓடு, ஆத்துமாவே, தீவிரி, பாரத்தை இறக்கிப் போடு, தெய்வச் சொல்லைக் கவனி. 20. அக்ரம சோதோமை விட்டு, அதன் செக்கையை வெறு; தப்பிப்போகத் தீவிரித்து நல்லொ துக்குக் குட்படு. 21. நீ பின்னானதைப நாடாமல், முன்னிருப்பதைப் பிடி; இச்சை வைத் தழுக்காகாமல் தெய்வ சிந்தையைத் தரி. 22. வென்றவரை மோட்சத்துக்குச் சேர்த்துயர்த்துவதற்கு வரும் மணவாளனுக்கு வாஞ்சையாகக் காத்திரு. 23. ஓடி அவரைச் சந்தித்து, "ஜீவனே, முள் காட்டைப்போல் காணும் இப்புவியை விட்டு, என்னைச்சேரும்," என்றுசொல்.