1. பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர்தான் உண்டே! பாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமே; சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால் துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால். 2. கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம்; மோச நாசம் நேரிட்டாலும் ஜெப தூபம் காட்டுவோம்; நீக்குவாரே நெஞ்சின் நோவை பலவீனம் தாங்குவார்; நீக்குவாரே மனச் சோர்பை, தீய குணம் மாற்றுவார். 3. பலவீனமானபோதும் கிருபாசனம் உண்டே; பந்து ஜனம் சாகும்போதும் புகலிடம் இதுவே; ஒப்பில்லாத பிராண நேசா! உம்மை நம்பி நேசிப்போம். அளவற்ற அருள் நாதா! உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்.