1. நான் உம்மை முழுமனதால் சிநேகிப்பேன் என் இயேசுவே நான் உம்மை நித்தம் வாஞ்சையால் பின்பற்றுவேன் என் ஜீவனே என் சாவு வேளை மட்டும் நீர் என் நெஞ்சில்தானே தங்குவீர். 2. நான் உம்மை நேசிப்பேன், நீர்தாம் என் உத்தம சிநேகிதர் நீர் தெய்வ ஆட்டுக்குட்டியாம் நீரே என் மீட்பரானவர் நான் உம்மை முன் சேராததே நிர்ப்பந்தம், வெட்கம், நஷ்டமே. 3. உம்மைப் பற்றாமல் வீணணாய் பொல்லாங்கைச் செய்து சுற்றினேன் பரத்தை விட்டுத் தூரமாய் இகத்தை அன்பாய்ப் பற்றினேன் இப்போ நான் உம்மைச் சேர்ந்தது நீர்தாமே செய்த தயவு. 4. நான் உம்மைச் சுக வாழ்விலும் சிநேகிப்பேன் என் கர்த்தரே நான் உம்மைத் துன்பநாளிலும் நேசிப்பேன் எந்தன் இயேசுவே என் சாவு வேளை மட்டும் நீர் என் நெஞ்சில்தானே தங்குவீர்.