1. என்கர்த்தாவே, உம்மில்தான் முழுநெஞ்சத்தாலேநான் வாஞ்சைகொண்டு, நித்தமும் லோகவாழ்வைஅற்பமும் குப்பையும்என்றெண்ணுவேன், உம்மையேசிநேகிப்பேன். 2.லோகத்தாரின்களிப்பு துக்கங்கொண்டநெஞ்சுக்கு சஞ்சலத்தையன்றியே, தேற்றத்தைஉண்டாக்காதே; உம்மையேசிநேகிப்பேன், அதால்பாக்கியம்அடைவேன். 3.தேவரீரில்வாழ்வெல்லாம் பூர்த்தியாகவேஉண்டாம்; உம்மில்வாஞ்சைகொள்வோனாய் உண்மையானநேசனாய் சேர்வோனுக்குத்தேவரீர் அந்தவாழ்வைக்கொடுப்பீர். 4.ஆறுதலும்பூரிப்பும், ஜீவனும்மகிழ்ச்சியும் உம்மால்தானேஎன்றைக்கும் குறைவின்றிக்கிடைக்கும்; நீரேஅன்பின்காரணர்; கருணைத்தயாபரர்.