1.என்னோடிரும் மா நேசக் கர்த்தரே , வெளிச்சம் மங்கிஇருட்டாயிற்றே ; மற்றோர் சகாயம் அற்ற போதிலும், நீங்கா ஒத்தாசை நீரே என்னோடிரும். 2.நீர் மேல் குமிழி போல் என் ஆயுசும் , இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும் கண் கண்ட யாவும் மாறி வாடிடும் ; மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும் . 3.நியாயம் தீர்ப்போராக என்னண்டை வராமல் , சாந்தம் தயை கிருபை நிறைந்த மீட்பராக சேர்ந்திடும் நீர் பாவி நேசரே என்னோடிரும் . 4.நீர் கூட நின்று அருள்புரியும் ; பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும் என் துணை நீர் ,என் தஞ்சமாயிரும் ; இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும் . 5. நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர்விடேன்; நீரேஎன்னோடிருந்தால் அஞ்சிடேன் ; சாவே, எங்கே என் கூரும் ஜெயமும் ? நான் உம்மை வெல்ல நீர் என்னோடிரும் . 6.நான் சாகும் அந்தகார நேரத்தில் உம் சிலுவையைக் காட்டும் ; சாகையில் விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும் ; வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்