1.தெய்வசமாதான இன்பநதியே மாபிரவாகமான வெள்ளம்போலவே நிறைவாகப்பாயும் ஓய்வில்லாமலும்; ஓடஆழமாயும் நித்தம்பெருகும் அருள்நாதர்மீதில் சார்ந்துசுகிப்பேன், நித்தம்இளைப்பாறல் பெற்றுவாழுவேன். 2.கையின்நிழலாலே என்னைமறைத்தார்; சத்துருபயத்தாலே கலங்கவிடார், சஞ்சலம்வராமல் அங்கேகாக்கிறார்; ஏங்கித்தியங்காமல் தங்கச்செய்கிறார். 3.சூரியஜோதியாலே நிழல்சாயையும் காணப்பட்டாற்போலே, துன்பம்துக்கமும் ஒப்பில்லாபேரன்பாம் சூரியசாயையே;