1.களிகூருவோம் ,கர்த்தர் நம் பட்சமே ;தம் ரத்தத்தால் நம்மை மீட்டார்; அவர் நமக்கு யாவிலும் எல்லாமே ,எப்பாவம் பயம் நீக்குவார் , கர்த்தர் நம் பட்சம் கர்த்தர் நம்மோடு கர்த்தர் சகாயர் யார் எதிர்க்க வல்லோர்? யார்வல்லோர் ? யார் எதிர்க்க வல்லோர் ? யார் வல்லோர்? 2.திடனடைவோம் ,தீமை மேற்கொள்ளுவோம் கர்த்தாவின் வல்ல கரத்தால் ! உண்மை பக்தியாய் நாடோறும் ஜீவிப்போம் , அவரே திடன் ஆகையால் . 3.வாக்கை நம்புவோம், உறுதி மொழியாய் கிறிஸ்துவில் ஆம் ஆமேன் என்றே ; பூமி ஒழிந்தும் என்றும் உறுதியாய் நிலைக்கும் , இது மெய் மெய்யே 4. நிலைத்திருப்போம் ,கர்த்தரின் கட்டினில், அதால் நித்திய ஜீவன் உண்டாம் ; பற்றும் ஏழையைத் தம் வல்ல கரத்தில் வைத்தென்றும் பாதுகாப்பாராம்