1. மேலோகத்தில் என் பங்கு நீர், கிறிஸ்துவே! கிறிஸ்துவே! மேலான நன்மை தேவரீர் கிறிஸ்துவே! கிறிஸ்துவே! நீர் பாரில் ரத்தம் சிந்தினீர் பேரன்பைக் காட்டி மரித்தீர் சீர்கெட்ட என்னை ரட்சித்தீர் கிறிஸ்துவே! கிறிஸ்துவே! 2. பூலோக மேன்மை வாஞ்சியேன் கிறிஸ்துவே! கிறிஸ்துவே! மேலோக இன்பம் நாடுவேன் கிறிஸ்துவே! கிறிஸ்துவே! இப்பாரின் வாழ்வு நில்லாதே தப்பாமல் வாடிப்போகுமே ஒப்பற்ற செல்வம் நீர் நீரே கிறிஸ்துவே! கிறிஸ்துவே! 3. நீர் ஏழையேனைக் கைவிடீர் கிறிஸ்துவே! கிறிஸ்துவே! சீராகக் காத்து ஆளுவீர் கிறிஸ்துவே! கிறிஸ்துவே! பொன் வெள்ளி ஆஸ்தி போயினும் துன்புற்றுப் பாடுபடினும் என் விசுவாசம் நிலைக்கும் கிறிஸ்துவே! கிறிஸ்துவே! 4. தீயோன் விரோதம் செய்யினும் கிறிஸ்துவே! கிறிஸ்துவே! ஓயாமலே போராடினும் கிறிஸ்துவே! கிறிஸ்துவே! அம்மூர்க்கம் கண்டு அஞ்சிடேன் உம்மாலே வெற்றி சிறப்பேன் கெம்பீர கீதம் பாடுவேன் கிறிஸ்துவே! கிறிஸ்துவே! 5. வெம் சாவையும் மேற்கொள்ளுவேன் கிறிஸ்துவே! கிறிஸ்துவே! உம் நேச மார்பில் சுகிப்பேன் கிறிஸ்துவே! கிறிஸ்துவே! பேரன்பரே! கை தாங்குவீர் நீர் விண்ணில் சேர்த்து வாழ்விப்பீர் ஓயாப் பேரின்பம் ஈகுவீர் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!