1. எங்கள் ஊக்க வேண்டல் கேளும் தூய தந்தையே தூரம் தங்கும் எங்கள் நேசர் காருமே. 2. மீட்பரே உம் பிரசன்னத்தால் பாதை காட்டுவீர் தாங்கும் பக்கல் தங்கி தாங்கும் சோர்வில் நீர். 3. துன்பம் தோன்றித் துணையின்றி மோசம் நேர்கையில் அன்பாய் நோக்கி ஆற்றல் செய்வீர் சோகத்தில்! 4. மீட்பின் மா மகிழ்ச்சி அவர் பலம் திடனாய் அன்போடும்மைப் போற்றச் செய்வீர் நாளுமாய். 5. தூய ஆவி போதனையால் தூய்மையாக்குவீர் போரில் வெற்றிபெற அருள் ஈகுவீர் 6. பிதா மைந்தன் தூய ஆவி விலகாதேயும் அருள் அன்பு மீட்பு காவல் ஈந்திடும்.