1. இவ்வந்தி நேரத்தில் எங்கே போய்த் தங்குவீர் என் இயேசுவே என் நெஞ்சில் நீர் பிரவேசிக்கும் மா பாக்கியத்தை அருளும். 2. ஆ, நேசரே நீர் அடியேன் விண்ணப்பத்துக்கிணங்குமேன் என் நெஞ்சின் வாஞ்சை தேவரீர் ஒருவரே என்றறிவீர். 3. பொழுது சாய்ந்துபோயிற்று இரா நெருங்கி வந்தது மெய்ப்பொழுதே, இராவிலும் இவ்வேழையை விடாதேயும். 4. ஆ, என்னைப் பாவ ராத்திரி பிடித்துக் கெடுக்காதினி நீர் ஒளி வீசியருளும் ரட்சிப்பின் பாதை காண்பியும். 5. நீர் என் கடை இக்கட்டிலும் என்னோடிருந்து ரட்சியும் உம்மைப் பிடித்துப் பற்றினேன் நீர் போய்விடீர் என்றறிவேன்.