1. உம்மண்டை, கர்த்தரே, நான் சேரட்டும்; சிலுவை சுமந்து நடப்பினும், என் ஆவல் என்றுமே உம்மண்டை, கர்த்தரே, நான் சேர்வதே. 2. தாசன் யாக்கோபைப் போல் ராக் காலத்தில் திக்கற்றுக் கல்லின் மேல் தூங்குகையில், என்தன் கனாவிலே உம்மண்டை, கர்த்தரே, இருப்பேனே. 3. நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம் விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம். தூதர் அழைப்பாரே உம்மண்டை, கர்த்தரே, நான் சேரவே. 4. விழித்து உம்மையே நான் துதிப்பேன். என் துயர்க் கல்லை உம் வீடாக்குவேன்; என் துன்பத்தாலுமே உம்மண்டை, கர்த்தரே, நான் சேர்வேனே.