1. இந்நாள் வரைக்கும் கர்த்தரே என்னைத் தற்காத்து வந்தீரே உமக்குத் துதி ஸ்தோத்திரம் செய்கின்றதே என் ஆத்துமம். 2. ராஜாக்களுக்கு ராஜாவே, உமது செட்டைகளிலே என்னை அணைத்துச் சேர்த்திடும் இரக்கமாகக் காத்திடும். 3. கர்த்தாவே, இயேசு மூலமாய் உம்மோடு சமாதானமாய் அமர்ந்து தூங்கும்படிக்கும், நான் செய்த பாவம் மன்னியும். 4. நான் புதுப் பலத்துடனே எழுந்து உம்மைப் போற்றவே அயர்ந்த துயில் அருளும் என் ஆவியை நீர் தேற்றிடும். 5. நான் தூக்கமற்றிருக்கையில், அசுத்த எண்ணம் மனதில் அகற்றி, திவ்விய சிந்தையே எழுப்பிவிடும், கர்த்தரே, 6. பிதாவே, என்றும் எனது அடைக்கலம் நீர், உமது முகத்தைக் காணும் காட்சியே நித்தியானந்த முத்தியே. 7. அருளின் ஊற்றாம் ஸ்வாமியை பிதா குமாரன் ஆவியை துதியும், வான சேனையே துதியும், மாந்தர் கூட்டமே.