1.அஞ்சாதிரு ,என் நெஞ்சமே , உன் கர்த்தர் துன்ப நாளிலே கண் பார்ப்போம் என்கிறார் ; இக்கட்டில் திகையாதிரு , தகுந்த துணை உனக்கு தப்பாமல் செய்குவார். 2. தாவீதும் யோபும் யோசேப்பும் அநேக நீதிமான்களும் உன்னிலும் வெகுவாய் . கசதி அடைந்தும் ,பக்தியில் வேரூன்றி ஏற்ற வேளையில் வாழ்ந்தார்கள் பூர்த்தியாய் . 3.கருத்தாய் தெய்வ தயவை எப்போ தும் நம்பும் பிள்ளையை சகாயர் மறவார் ; மேயபக்தி உன்னில் வேர்கொண்டால் இரக்கமான கரத்தால் அணைத்து பாலிப்பார் . 4.என் நெஞ்சமே ,மகிழ்ந்திரு பேய் ,லோகம், துன்பம் உனக்கு பொல்லாப்புச் செய்யாதே ; இம்மானுவேல் உன் கன்மலை , அவர் மேல் வைத்த நம்பிக்கை அபத்தம் ஆகாதே.