1.காரிருளில் என் நேச தீபமே , நடத்துமேன் ; வேறொளியில்லை; வீடும் தூரமே , நடத்துமேன் ; நீர் தாங்கின் தூர காட்சி ஆசியேன் : ஓர் அடி மட்டும் என் முன் காட்டுமேன் . 2. என் இஷ்டப்படி நடந்தேன் ஐயோ ! முன்னாளிலே ; ஒத்தாசை தேடவில்லை இப்போதோ நடத்துமே; உல்லாசம் நாடினேன் திகிலிலும் வீம்பு கொண்டேன் அன்பாக மன்னியும் 3. இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர் ; இனிமேலும் காடாறு சேறு குன்றில் தேவரீர் நடத்திடும் ; உதய நேரம் வரக் கழிப்பேன் மறைந்து போன நேசரைக் காண்பேன்