1.கர்த்தாவை நல்ல பக்தியாலே எப்போதும் நம்பும் நீதிமான் எத்தீங்கிலும் அவராலே அன்பைக் காப்பற்றப்படுவான் ; உன்னதமான கர்த்தரை சார்ந்தோர்க்கவர் கன்மலை . 2.அழுத்தும் கவலைகளாலே பலன் ஏதாகிலும் உண்டோ? நாம் நித்தம் சஞ்சலத்தினாலே தவிப்பது உதவுமோ ? விசாரத்தாலே நமக்கு இக்கட்டதிகரிக்கது . 3.உன் காரியத்தை நலமாக திருப்ப வல்லவர்க்கு நீ அதை ஒப்புவிப்பாயாக ; விசாரிப்பார் ,அமர்ந்திரு , மா திட்டமாய்த் தயாபரர் உன் தாழ்ச்சியை அறிந்தவர் . 4.சந்தோஷிப்பிக்கிறதான நாள் எதென்றவர் அறிவார் ; அநேக நற்குணங்கள் காண அந்தந்த வேளை தண்டிப்பார் , தீவிரமாய்த் திரும்பவும் தெய்வன்பு பூரிப்பைத் தரும் . 4.நீ கர்த்தரால் கைவிடப்பட்டோன் என்றாபத்தில் நினையாதே ; எப்போதும் பாடும் நோவுமற்றோன் பிரிய னென்றும் எண்ணாதே ; அநேக காரியத்துக்கு பின் மாறுதல் உண்டாகுது . 5.கதியுள்ளோனை ஏழையாக்கி மகா எளியவனையோ திரவிய சம்பன்னணாக்கி உயர்த்த ஸ்வாமிக்கரிதோ ? தாழ்த்துவார் ,உயர்த்துவார் அடிக்கிறார் ,அணைக்கிறார் . 7.மன்றாடி பாடி கிரிஸ்தோனாக நடந்து கொண்டுன் வேலையை நீ உண்மையோடே செய்வாயாக ; அப்போ தெய்வாசீர்வாதத்தை திரும்பக் காண்பாய் ; நீதிமான் கர்த்தாவால் கைவிடப்படான்