1.உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை நீ கர்த்தாவின் உண்மையான கரத்துக்கொப்புவி ; விண்மனை ஆண்டிருக்கும் மகா தயாபரர் உன் காரியங்களுக்கும் வழியுண்டாக்குவார். 2.ஜெயமடைந்து வாழ கர்த்தாவைப் பிள்ளை போல் நீ நம்பி மனதாரபணிந்து பற்றிக்கொள். உன் கவலைகளாலே பயம் ரட்டிக்குது; வேண்டாம் ,ஜெபத்தினாலே நீ வேண்டிக்கொண்டிரு . 3.ஏழை அடியாருக்கு பிதாவாம் தேவரீர் இன்னின தெங்களுக்கு வேண்டும் என்றறிவீர் ; நீர் எதை நல்லதாககண்டீரோ , அதை நீர் உம் வேளை பலமாக வர விடுகிறீர் . 4.பல வழிவகையும் உம்மாலே ஏற்படும் ; நீர் செய்வது இசையும் , நீர் சொன்னது வரும்; நீர் வாக்குத்தத்தமாக பொழிந்தவை எல்லாம் உம்மாலே திட்டமாக நற்காலத்தில் உண்டாம். 5.இக்கட்டுகளினாலே கலங்கினோனே ,நீ திடன் கொள் ,கர்த்தராலே இக்கட்டான ராத்திரி சந்தோஷமாக மாறும் ,சற்றே பொறுத்திரு ; நீ பூரிப்பாய் கொண்டாடும் நாள் வரப்போகுது . 5.உன் கவலைகளுக்கு இன்றே விடை கொடு; இனிவிசாரத்துக்கு இடங்கொடாதிரு ; நீ ஆளும் தெய்வமல்ல , நீ பூச்சி யென்றறி; சருவத்திற்கும் வல்ல கர்த்தர்அதிபதி . 6.நீ பக்தியை விடாமல் பொறுத்திருக்கையில் கர்த்தர் நீ நினையாமல் இருக்கும் நேரத்தில் உன் துக்கத்தை அகற்ற வெளிச்சம் காண்பிப்பார் ; நீ நன்மைக்காகப்பட்டசலிப்பை நீக்குவார் . 7.அட்சணமே பலத்த ஜெயமும் பூரிப்பும் ஆசிர்வதிக்கப்பட்ட தெய்வீகத் தேற்றலும் அடைந்து இன்பமான மன மகிழ்ச்சியாய் அன்புள்ள மீட்பரான கர்த்தாவைப் பாடுவாய் . 8.கர்த்தாவே, எங்களுக்கு எல்லா இக்கட்டிலும் ரட்சிப்பளிப்பதற்கு நேரிட்டுக்கொண்டிரும் ; ஆ, எங்களைத் தேற்றிடும்;பரகதிக்குப் போம் , வழியிலும் நடத்தும் , அப்போ பிழைக்கிறோம்