1. இயேசுவே நீர்தாம் ஜீவ நாள் எல்லாம் மோட்சத்துக்கு சேருமட்டும் கைதந்தெங்களை நடத்தும்! நீர் முன்னாலே போம், உம்மோடேகுவோம். 2. தீங்கு மிஞ்சினால் எங்களை அன்பால் கலங்காதபடி காரும் நிலை நிற்கும் வரம் தாரும் இங்கே சிலுவை, அங்கே மகிமை. 3. சொந்த கிலேசமும் நேசர் துன்பமும் நெஞ்சை வாதித்தால், அன்பாக பொறுமை அளிப்பீராக; ஜீவ கிரீடத்தை நோக்க நீர் துணை. 4. நீர் இவ்வுலகில் கஷ்ட வழியில் எங்களை நடத்தினாலும் ஆதரியும்; நாங்கள் மாளும் போதும்மிடமே சேரும், நேசரே.