1.அன்போடு எம்மைப் போஷிக்கும் பெத்தேலின் தெய்வமே ; முன்னோரையும் நடத்தினீர் கஷ்ட இவ்வாழ்விலே . 2.கிருபாசன்முன் படைப்போம் எம் ஜெபம் ஸ்தோத்ரமும் ; தலைமுறையாத் தேவரீர் எம் தெய்வமாயிரும் . 3.மயங்கும் ஜீவா பாதையில் மெய்ப் பாதை காட்டிடும் ; அன்றன்றுமே நீர் தருவீர் ஆகாரம் வஸ்திரமும் . 4.இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து, பிதாவின் வீட்டினில் சேர்ந்திளைப்பாருமளவும் காப்பீர் உம் மறைவில் . 5.சிலுவை சுமந்தோராக அவரைப் பின்பற்றுவோம் ; தீரங்கொண்டுவீரராக துன்பம் நிந்தை சகிப்போம். 6.நேசர் தயவாய் நம்மோடு சொல்லும் ஒரு வார்த்தையே , துக்கத்தை எல்லாம் கட்டோடு நீங்கிப்போகச் செய்யுமே . 7.சாகும்பொது, திறவுண்ட வானத்தையும் ,அதிலே மகிமையினால் சூழுண்ட இயேசுவையும் காண்போமே . 8.வாழ்க, சிலுவையே ! வாழ்க மோட்சத்தின் முன் தூதனே ! நீதிமான்கள் இளைப்பாற நேர் வழியாம் வாசலே!