1. மாபெரிதாம்நின்கிருபை சாவரைமறவேனே; மாதாவின்கர்ப்பத்திருந்தே மாதயவாய்என்னையே அழைத்தீரே, மாதவம்நான்செய்தேனோ? 2.அந்தகாரத்தால்நிறைந்து சொஸ்தமின்றிவாழ்ந்தேனே; தந்துஉம்மைச்சொந்தமாக என்தனைநீர்மீட்டீரே; நாதாஉம்மை என்றும்நான்துதிப்பேனே. 3.நான்நினைத்தபாதைவழி தேன்கசியும்பக்கமே செல்லஎத்தனித்தபோது, அல்லவென்றுதடுத்தே ஆட்கொண்டீரே, ஆண்டாண்டும்மைப்போற்றுவேன். 4.ஊழியத்தைஉண்மையுடன் வாழ்நாளெல்லாம்செய்யவும்; நீடும்கிருபைசூடியென்னை வீடுசேரும்வரையும் பலவீனம் தாங்கிதயைசெய்வீரே.