1. சிலுவை சுமந்தோனாக இயேசு உம்மைப் பற்றுவேன் ஏழைப் பரதேசியாக மோட்ச வீடு நாடுவேன்; உற்றார், மேன்மை, ஆஸ்தி, கல்வி, ஞானம், லோகம் அனைத்தும் அற்பக் குப்பை என்று எண்ணி, வெறுப்பேனே முற்றிலும். 2. உமக்காகப் பாடுபட்டோன் நஷ்டப்படமாட்டானே; உமக்கென்று ஜீவன் விட்டோன் சாகா ஜீவன் பெற்றானே உம்மை வெல்ல மீட்பர் என்று சொல்லி, நித்தம் பற்றுவேன்; கஸ்திப்பட்டும் சாவை வென்று, வாடா கிரீடம் பெறுவேன். 3. துஷ்டர் என்னைப் பகைத்தாலும், நீரே தஞ்சம் ஆகுவீர்; கஸ்தி என்ன நேரிட்டாலும், இனி மேன்மை தருவீர்; உமதன்பு என்னைத் தேற்ற, துக்கம், பயமில்லையே நாதா, உம் பிரசன்னம் நீங்க இன்பமெல்லாம் துன்பமே. 4. நெஞ்சமே, உன் மேன்மை எண்ணு, வரும் செல்வம் நோக்கிப்பார் மோட்ச நன்மை தேடிக்கொள்ளு, உன் சுதந்தரத்தைக் கா; கொஞ்ச வேளைக்குள் பறந்து இயேசு அண்டை சேருவாய்; தெய்வ தூதரோடு நின்று என்றென்றைக்கும் துதிப்பாய்.