1. நல்மீட்பரே, உம்மேலே என்பாவம்வைக்கிறேன்; அன்புள்ளகையினாலே என்பாரம்நீக்குமேன்; நல்மீட்பரே, உம்மேலே என்குற்றம்வைக்க, நீர் உம்தூயரத்தத்தாலே விமோசனம்செய்வீர். 2.நல்மீட்பரே, உம்மேலே என்துக்கம்வைக்கிறேன்; இப்போதிம்மானுவேலே எப்பாடும்நீக்குமேன்; நல்மீட்பரே, உம்மேலே என்தீனம்வைக்க, நீர் உம்ஞானம்செல்வத்தாலே பூரணமாக்குவீர். 3.நல்மீட்பரே, உம்பேரில் என்ஆத்துமாசார, நீர் சேர்த்துஉம்திவ்வியமார்பில் சோர்பெல்லாம்நீக்குவீர்; நேசா! இம்மானுவேலே! இயேசென்னும்நாமமும் உகந்ததைலம்போலே சுகந்தம்வீசிடும். 4. நல்மீட்பரே, பாங்காக அன்போடுசாந்தமும் நீர்தந்தும்சாயலாக சீராக்கிமாற்றிடும்; நல்மீட்பரே, உம்மோடு பின்விண்ணில்வாழுவேன்; நீடூழிதூதர்பாட, பாடின்றிப்பூரிப்பேன்.