1. எந்தன் ஜீவன் இயேசுவே சொந்தமாக ஆளுமே எந்தன் காலம் நேரமும் நீர் கையாடியருளும். 2. எந்தன் கை பேரன்பினால் ஏவப்படும்; எந்தன் கால் சேவை செய்ய விரையும் அழகாக விளங்கும். 3. எந்தன் நாவு இன்பமாய் உம்மைப் பாடவும், என் வாய் மீட்பின் செய்தி கூறவும் ஏதுவாக்கியருளும் 4. எந்தன் ஆஸ்தி, தேவரீர் முற்றும் அங்கீகரிப்பீர்; புத்தி கல்வி யாவையும் சித்தம்போல் பிரயோகியும். 5. எந்தன் சித்தம், இயேசுவே, ஒப்புவித்துவிட்டேனே; எந்தன் நெஞ்சில் தங்குவீர் அதை நித்தம் ஆளுவீர். 6. திருப்பாதம் பற்றினேன் எந்தன் நேசம் ஊற்றினேன் என்னையே சமூலமாய் தத்தம் செய்தேன் நித்தமாய்.