1. ஆ இயேசுவே, நான் பூமியில் உயர்த்தப்பட்டிருக்கையில் எல்லாரையும் என் பக்கமே இழுத்துக்கொள்வேன் என்றீரே. 2. அவ்வாறென்னை இழுக்கையில், என் ஆசை கெட்ட லோகத்தில் செல்லாமல்; பாவத்தை விடும், அநந்த நன்மைக்குட்படும். 3. தராதலத்தில் உம்முடன் உபத்திரவப்படாதவன் உம்மோடு விண்ணில் வாழ்ந்திரான்; சகிப்பவன் சந்தோஷிப்பான். 4. பிதாவின் வீட்டில் தேவரீர் ஸ்தலம் ஆயத்தம் செய்கிறீர்; அங்கே வசிக்கும் தூயவர் இக்கட்டும் நோவும் அற்றவர்.