1.நான் பாவி தான் ,-ஆனாலும் நீர் மாசற்ற ரத்தம் சிந்தினீர்; 'வா' என்று என்னை அழைத்தீர் ; என் மீட்பரே வந்தேன் . 2.நான் பாவி தான் -என் நெஞ்சிலே கறை பிடித்து கெட்டேனே ; என் கறை நீங்க இப்போதே , என் மீட்பரே வந்தேன் . 3.நான் பாவி தான்- மா பயத்தால் திகைத்து பாவ பாரத்தால் அமிழ்ந்து மாண்டு போவதால் என் மீட்பரே வந்தேன் . 4.நான் பாவி தான் ,-மெய்யாயினும் சீர், நேர்மை , செல்வம், மோட்சமும் அடைவதற்கு உம்மிடம் என் மீட்பரே வந்தேன் . 5. நான் பாவி தான் ,-இரங்குவீர் , அணைத்து, காத்து , ரட்சிப்பீர் , அருளாம் செல்வம் அளிப்பீர் , என் மீட்பரே வந்தேன் . 6.நான் பாவி தான் -அன்பாக நீர் நீங்கா தடைகள் நீக்கினீர் ; உமக்கு சொந்தம் ஆக்கினீர் ; என் மீட்பரே வந்தேன் . மாண்டு