1. குடிக்க யாவரும் அழைப்பு பெற்றதான தெய்வீகத் தயவின் ஊற்றின்னம் ஓட்டமான இப்போதென் ஆவியே, நீ இயேசுவண்டை போ, வேறு யாராகிலும் ரட்சிக்கக் கூடுமோ. 2. சீர் கெட்ட உன்னை நீ ரட்சிப்பது வீணாமே, நீ பற்ற வேண்டிய சகாயர் கிறிஸ்து தாமே; பிதாவை இவரே ஒப்புரவாக்கினார், இவர்நிமித்தமே பிதா இரங்கினார். 3. உன் பாவக் குற்றங்கள் உன்னால் நீங்காத கேடு; மெய் விசுவாசத்தால் நீ இயேசு வண்டை சேரு; உன் சுய புத்தியை நீ பின்பற்றாதே போ, வழிகாட்டுபவர் தெய்வாவி அல்லவோ. 4. அன்புள்ள கர்த்தரே, அநேகப் பாவத்தாலே திகைத்திருக்கிற நான் வேட்டைக் காரராலே துரத்தப்பட்டதாம் மான் போல் தவிக்கிறேன்; இரக்கத்தின் ஊற்றே, என் தாகந்தருமேன். 5. மனத் தரித்திர்ர் விண்ணப்பத்தைத் தள்ளீரே; அவர்கள் பாவத்தை மன்னிக்கிறிறோ மென்றீரே அடியேன் உமது நல்லாவி காண்பிக்கும் வழிக்குள்ளாகிறேன்; ஆ, என்னை ரட்சியும். 6. என் தவனத்துக்கு அச்சீவனின் தண்ணீரை அளியும், கர்த்தரே; அத்தால் நான் நல்ல சீரை அடைந்து புதிதாய்ச் சிஷ்டிக்கப்படுவேன் ஆ, இந்தப் பாக்கியம் என்மேல் வரட்டுமேன்.