1. மனு சுதா, எம் வீரா, வல்ல அன்பா! உம் தொண்டரே இப்பாரில் தீரராம்; எம் இன்பம் துன்பம் சகிக்கும் மா நண்பா! உமக்கு நாங்கள் ஜீவ பலியாம். 2. மா கஷ்ட பாதை சென்றீர் தேவரீரே, சத்திய வார்த்தை நீர் அருளினீர்; அன்போடு காட்டுப் புஷ்பம் வியந்தீரே, வாலிபர் வீரம் கண்டே மகிழ்ந்தீர். 3. பாலியர் போதகா, இளைஞர் நேசா! மாந்தரின் வேந்தர் ஊழியனும் நீர்; நம்பிக்கை ஆறுதல் இன்பத்தின் நாதா! எம் நோக்கம் இன்பம் பயம் ஆளுவீர். 4. ஆறுதல் ஈயும் அன்பரை அண்டுவோம், எம்மோடிரும் எம் தோல்வி துன்பிலும்; செல்வர் விருந்தா! இன்பத்தில் வேண்டுவோம்! இல்லார் நல் தோழா, தாழ்வில் தங்கிடும்.