1ம்பாகம் 1.பிரியமானஇயேசுவே, என்நெஞ்சைத்தயவாக நீர்பூரிப்பாக்கி, என்னிலே மிகுந்தநிறைவாக தெய்வீகஅன்பைஊற்றியே, பேரருள்தந்தஉம்மையே நான்துதிசெய்வேனாக. 2.என்நெஞ்சில்உம்மால்பற்றின அன்பென்னும்தீஎரியும்; என்மனதும்மால்உத்தம மகிழ்ச்சியைஅறியும்; நான்உம்மைநோக்கும்போதெல்லாம், என்துக்கம்உம்மிலேஉண்டாம் அருளினால்தெளியும். 3.நீர்என்வெளிச்சம்; உம்மால் திறந்தமுகமாகநான் பிதாவின்இன்பநெஞ்சைத்தான் என்ஆறுதலுக்காக கண்ணோக்கும்போது, தயவாய் நீர்என்னைநீங்காஜோதியாய் பிரகாசிப்பிப்பீராக. 4.நீர்மோட்சத்துக்குப்போம்வழி; உனக்குள்ளானயாரும் தப்பிப்போகார்; ஆ, இந்நெறி விலகினோர்எல்லாரும் கெட்டழிந்துபோவார்களே; வழியாம்ஸ்வாமீ, உம்மிலே நிலைக்கஎன்னைக்காரும் 5.நீர்சத்தியம்; நான்உம்மையே தெரிந்துகொண்டிருப்பேன்; மாறாமெய்ப்பொருள்நீரே, வீண்மாய்கையைவெறுப்பேன்; உம்மாலேபாக்கியம்வரும்; மெய்யே, என்நெஞ்சைஎன்றைக்கும் நான்உமக்கேபடைப்பேன். 6. நீர்ஜீவன்; என்னைநீர்நீரே பலத்தால்இடைகட்டும்; திடன்இல்லாஅந்நேரமே என்நெஞ்சில்ஊக்கம்தாரும், தெய்வீகஜீவன்என்னிலே மென்மேலும்வளர்ந்தோங்கவே நல்லாவியாலேகாரும். 2ம்பாகம் 1.நீர்ஜீவஅப்பம்; பஞ்சத்தில் உம்மால்என்பசிஆறும்; நான்போம்வனாந்தரங்களில் என்உள்ளம்உம்மைநாடும்; பிதாவின்ஈவாய்மன்னாவே, நீர்என்னைப்பாவஇச்சைக்கே விலக்கிக்காத்துக்கொள்ளும். 2.நீர்ஜீவஊற்று; உம்மாலே என்ஆத்மத்தாகம்தீரும்; நீர்தரும்ஈவுநித்தமே சுரக்கும்தண்ணீராகும்; நீரூற்றாய்என்னில்ஊறுமேன், நிறைவாய்நித்தம்தாருமேன் ஆரோக்கியமும்சீரும். 3.நீர்என்னைஜோடிக்கும்உடை, நீர்என்அலங்கரிப்பு; நான்உம்முடையநீதியை அணிவதென்விருப்பு; பூலோகத்தின்சிங்காரமாம் விநோதசம்பிரமம்எல்லாம் என்ஆவிக்குவெறுப்பு. 4. நீர்நான்சுகித்துதங்கிடும் அரண்மனையும்வீடும்; புசல்அடித்தும்விருதா, பேய்வீணாய்என்னைச்சீறும்; நான்உம்மில்நிற்பேன், ஆகையால் கெடேன்; பொல்லார்எழும்பி நீர்என்வழக்கைத்தீரும். 5.என்மேய்ப்பராய்இருக்கிறீர், என்மேய்ச்சலும்நீர்தாமே; காணாமல்போனஎன்னைநீர் அன்பாகமீட்போராமே; இவ்வேழைஆட்டைஎன்றைக்கும் நீர்விலகவிடாதேயும் நான்உம்முடையோனாமே. 6.நீரேநான்என்றும்வாஞ்சிக்கும் மாநேசமுள்ளநாதர்; நீரேஎன்ஆசாரியரும் பலியுமானகர்த்தர்; நீர்என்னைஆளும்ராஜாவும் உம்மோடேஎந்தப்போரிலும் ஜெயிப்பேன், மாசமர்த்தர். 3ம்பாகம் 1.நீர்உத்தமசிநேகிதர் என்நெஞ்சும்மேலேசாயும்; நீர்உத்தமசகோதரர், நீர்என்னைப்பார்க்கும்தாயும், நீர்நோயில்பரிகாரியே, உம்மாலேஆறிப்போகுமே என்காயமும்விடாயும். 2.படையில்நீர்சேனாபதி, வில்கேடகம்சீராவும்; கரும்கடலில்நீர்வழி காண்பிக்கும்சமுக்காவும்; எழும்பும்கொந்தளிப்பிலே நீர்என்நங்கூரம், இயேசுவே, நான்ஒதுங்கும்குடாவும். 3.நீர்ராவில்என்நட்த்திரம், இருளில்என்தீவர்த்தி; குறைவில்நீர்என்பொக்கிஷம், தாழ்விலேஎன்உயர்ச்சி; கசப்பிலேஎன்மதுரம்; நான்தொய்ந்தால்மீண்டும்என்மனம் பலக்க, நீர்என்சக்தி. 4. நீர்ஜீவனில்விருட்சமும், நீர்செல்வங்கள்பொழியும் பூங்காவனமும், என்றைக்கும் சுகம்தரும்கனியும்; முள்ளுள்ளபள்ளத்தாக்கிலே என்ஆவிக்குநீர், இயேசுவே, குளிர்ந்தபூஞ்செடியும். 5. நீர்துக்கத்தில்என்ஆறுதல், நீர்வாழ்வில்என்களிப்பு; நீர்வேலையில்என்அலுவல், பகலில்என்சிந்திப்பு; நீர்ராவில்அடைக்கலம், நீர்தூக்கத்தில்என்சொப்பனம், விழிப்பில்என்குறிப்பு. 6.ஆ, ஒப்பில்லாதஅழகே! நான்எத்தனைசொன்னாலும் என்நாவினாலேகூடாதே; நான்நாவினாலேகூடாதே; நான்என்னவாஞ்சித்தாலும் அதெல்லாம்நீரே, இயேசுவே; ஆ, தயவுள்ளநேசரே நீர்என்றும்என்னைஆளும்.