போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும் வானோர் கூடிப் பாடவும் இன்பமாய் பாரிலேயும் நாம சங்கீர்த்தனம் செய்ய மாந்தர் யா(வ)ரும் வாரும் ஆனந்தமாய் நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறு இயேசு நாதர் நம்மையும் தாங்குவார் போற்றும், போற்றும்! தெய்வ குமாரனைப் போற்றும்! பாதுகாத்து நித்தமும் போஷிப்பார் போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும் பாவம் போக்கப் பாரினில் ஜென்மித்தார் பாடுபட்டுப் பிராணத் தியாகமும் செய்து வானலோக வாசலைத் திறந்தார் மா கர்த்தாவே ஸ்தோத்திரம் என்றும் என்றும்! வாழ்க வாழ்க ஜெகத்து ரட்சகா அருள் நாதா மாசணுகா பரஞ்சோதி வல்ல நாதா, கருணை நாயகா! போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும் விண்ணும் மண்ணும் இசைந்து பாடவும் போற்றும் போற்றும் மீட்பர் மகத்துவமாக ஆட்சி செய்வார் நித்திய காலமும் ஏசு ராஜா, மாட்சிமையோடு வந்து இயேசு சுவாமி பூமியில் ஆளுமேன்; லோகம் எங்கும் நீதியின் செங்கோலை ஓச்சி ஜோதியாகப் பாலனம் பண்ணுமேன்