1. நல் மீட்பரே இந்நேரத்தில் வந்தாசீர்வாதம் கூறுமேன் உம் வார்த்தை கேட்டோர் மனதில் பேரன்பின் அனல் மூட்டுமேன் வாழ்நாளிலும் சாங்காலத்தும் ஆ இயேசுவே, பிரகாசியும். 2. இன்றெங்கள் செய்கை யாவையும் தயாபரா, நீர் நோக்கினீர் எல்லாரின் பாவம் தவறும் மா அற்பச் சீரும் அறிந்தீர் வாழ்நாளிலும் சாங்காலத்தும் ஆ இயேசுவே பிரகாசியும். 3. எப்பாவத் தீங்கிலிருந்தும் விமோசனத்தைத் தாருமேன் உள்ளான சமாதானமும் சுத்தாங்கமும் உண்டாக்குமேன் வாழ்நாளிலும் சாங்காலத்தும் ஆ இயேசுவே, பிரகாசியும். 4. சந்தோஷம் பயபக்தியும் நீர் நிறைவாக ஈயுமேன் உமக்கொப்பாக ஆசிக்கும் தூய்மையாம் உள்ளம் தாருமேன் வாழ்நாளிலும் சாங்காலத்தும் ஆ இயேசுவே, பிரகாசியும் 5. தரித்திரம் துன்பும் பாவத்தால் இக்கட்டடைந்த யாரையும் கண்ணோக்கும் மா கிருபையால் நீர் மீட்பர், நீர் சமஸ்தமும் வாழ்நாளிலும் சாங்காலத்தும் ஆ இயேசுவே, பிரகாசியும்.