1. களிப்புடன் கூடுவோம் கர்த்தரை நாம் போற்றுவோம் அவர் தயை என்றைக்கும் தாசரோடு நிலைக்கும். 2. ஆதிமுதல் அவரே நன்மை யாவும் செய்தாரே அவர் தயை என்றைக்கும் மாந்தர்மேலே சொரியும். 3. இஸ்ரவேலைப் போஷித்தார் நித்தம் வழி காட்டினார்; அவர் தயை என்றைக்கும் மன்னாபோலே சொரியும். 4. வானம் பூமி புதிதாய் சிஷ்டிப்பாரோ ஞானமாய் அவர் தயை என்றைக்கும் அதால் காணும் யாருக்கும்.