1. அன்புருவாம் எம் ஆண்டவா, எம் ஜெபம் கேளும், நாயகா; நாங்கள் உம் ராஜ்ஜியம் ஆண்டாண்டும் பாங்குடன் கட்ட அருளும். 2. வாலிபத்தில் உம் நுகமே வாய்மை வலுவாய் ஏற்றுமே, வாழ்க்கை நெறியாம் சத்தியம் நாட்ட அருள்வீர் நித்தியம். 3. அல்லும் பகலும் ஆசையே அடக்கி ஆண்டு, உமக்கே; படைக்க எம்மைப் பக்தியாய் பழுதேயற்ற பலியாய். 4. சுய திருப்தி நாடாதே, உம் தீர்ப்பை முற்றும் நாடவே; வேண்டாம் பிறர் பயம் தயை, வீரமாய்ப் பின் செல்வோம் உம்மை. 5. திடனற்றோரைத் தாங்கிட, துக்கிப்பவரை ஆற்றிட; வாக்கால் மனத்தால் யாரையும் வருத்தா பலம் ஈந்திடும். 6. எளிதாம் வாழ்க்கை ஏங்கிட, தீங்கற்ற இன்பம் தேடிட, மன்னிக்க முற்றும் தீமையை நேசிக்க மனு ஜாதியை.