என்னிடத்தில் பாலர் யாரும் வர வேண்டும் என்கிறார் இப்பேர்ப்பட்டவர் எல்லாரும் வான ராஜ்யம் அடைவார் என்று சொல்லி, நேசக் கையில் இயேசு ஏந்தி அணைத்தார் பாலர் அவரை உள்ளத்தில் அன்பாய் எண்ணிப் போற்றுவார் தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா மா ஸ்தோத்திரம் என்று பாடி, சீயோனுக்கு நேரே சென்ற சமயம் வாழ்த்தல் செய்த வண்ணம் நாமும் வாழ்த்திப் பாடி, பக்தியாய் இயேசுவை வணங்கி, என்றும் ஸ்தோத்தரிப்போம் ஏகமாய் பாலனாய் பிறந்த மீட்பர் ராஜாவாக வருவார் கூட வரும் தெய்வ தூதர் மேகமீது தோன்றுவார் நல்லோர் தீயோர் இயேசுவாலே தீர்ப்படையும் நேரத்தில் பாலர் போன்ற குணத்தாரே வாழ்வடைவார் மோட்சத்தில்