1. இயேசு கற்பித்தார் ஒளி வீசவே சிறு தீபம் போல இருள் நீக்கவே; அந்தகார லோகில் ஒளி வீசுவோம் அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம். 2. முதல் அவர்க்காய் ஒளி வீசுவோம் ஒளி மங்கிடாமல் காத்துக்கொள்ளுவோம் இயேசு நோக்கிப் பார்க்க ஒளி வீசுவோம் அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம். 3. பிறர் நன்மைக்கும் ஒளி வீசுவோம்; உலகின் மா இருள் நீக்க முயல்வோம் பாவம் சாபம் யாவும் பறந்தோடிப்போம் அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்.