1. இயேசு எங்கள் மேய்ப்பர், கண்ணீர் துடைப்பார்; மார்பில் சேர்த்தணைத்து பயம் நீக்குவார்; துன்பம் நேரிட்டாலும், இன்பம் ஆயினும், இயேசுவின் பின் செல்வோம் பாலர் யாவரும். 2. நல்ல மேய்ப்பர் சத்தம் நன்றாய் அறிவோம் காதுக்கின்பமாக கேட்டுக் களிப்போம் கண்டித்தாலும், நேசர் ஆற்றித் தேற்றுவார்; நாங்கள் பின்னே செல்ல வழி காட்டுவார். 3. ஆட்டுக்காக மேய்ப்பர் ரத்தம் சிந்தினார்; அதில் மூழ்கினோரே தூயர் ஆகுவார்; பாவ குணம் நீக்கி முற்றும் ரட்சிப்பார்; திவ்விய தூய சாயல் ஆக மாற்றுவார். 4. இயேசு நல்ல மேய்ப்பர் ஆட்டைப் போஷிப்பார்; ஓநாய்கள் வந்தாலும் தொடவே ஒட்டார் சாவின் பள்ளத்தாக்கில் அஞ்சவே மாட்டோம் பாதாளத்தின் மேலும் ஜெயங்கொள்ளுவோம்.