1. வாழ்க எம் தேசமே ஊழியாய் ஓங்கியே வாழ்ந்திடுவாய் பூர்வீக தேசமே கூறொண்ணா கீர்த்தியே பார் போற்றும் மேன்மையே நீ பெறுவாய். 2. உன் வயல் வெளிகள் உன்னத காட்சிகள் ஒப்பற்றதே வான் எட்டும் பர்வதம் கான்யாறு காற்றுகள் போன்றே மா மாட்சியாய் நீ ஓங்குவாய். 3. கர்த்தாவின் கரமே நித்தியம் எம் தேசமே உன் மேலுமே உன் நாதர் கிறிஸ்துவே உன் அன்பர் வாக்கையே அன்போடு பற்றியே நீ ஓங்குவாய்.