மெய் அன்பரே, உம் மா அன்பை உய்த்தெம்மைச் சொந்தமாக்கினீர் பூலோக பாக்கியத்தால் எம்மை மேலோக சிந்தையாக்குவீர் உம் ஆவியால் எம் உள்ளத்தில் உந்தன் மா நோக்கம் காட்டுவீர் உம் நோக்கம் பூர்த்தியாகிட எம் நெஞ்சில் அன்பும் நாட்டினீர் மெய் அன்பால் அன்பர் ஸ்வாமி எ.ய்துவார் உன்னத நிலை பேரின்ப பேறு ஆன்மாவில் பாரினில் மேலாம் வாழ்க்கையை தம் உள்ளம் ஒன்றாய் இணைக்கும் தம்பதிகள் இவருக்கே நித்தம் புத்தன்பு இன்பமும் சித்தமே வைத்து ஈயுமே நற்குணம் யாவும் இவரில் நன்கே அமைந்து, தீமையை அகற்றி, பெற நெஞ்சத்தில் அழகு வன்மை தூய்மையை ஏகமாய் ஜீவ பாதையில் சுகமாய் வாழ, உம்மிலே தம் அன்பை ஊன்றி வாழ்க்கையில் எத்துன்பம் கஷ்டம் மேற்கொண்டே