1. புத்திக்கெட்டாத அன்பின் வாரீ, பாரும் உம் பாதம் அண்டினோமே, தேவரீர் விவாகத்தால் இணைக்கும் இரு பேரும் ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர். 2. ஆ ஜீவ ஊற்றே, இவரில் உம் நேசம், நல் நம்பிக்கையும், நோவு சாவிலும் உம் பேரில் சாரும் ஊக்க விசுவாசம், குன்றாத தீரமும் தந்தருளும். 3. பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி, மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்; வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றி நிறைந்த ஜீவன், அன்பும் நல்குவீர்.